Object Image

வானியலாளர் (ஓவியம்)

ஓவியத்துறையில் வானியலாளர் என்பது டச்சு ஓவியரான யொகான்னசு வெர்மீர் என்பவரால் 1668 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட ஓவியத்தைக் குறிக்கும். எண்ணெய் வண்ணம் கொண்டு 51 சமீ x 45 சமீ அளவுள்ள கன்வசில் வரையப்பட்ட இவ்வோவியம் தற்போது பாரிசு நகரில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது]].அறிவியலாளர்களை வரைபொருள் ஆக்குவது 17 ஆம் நூற்றாண்டு டச்சு ஓவியங்களில் விருப்பத்துக்குரிய விடயமாக இருந்தது. வெர்மீர் வரைந்த ஓவியங்களுள் இவ்வாறான ஓவியங்களாக இதுவும், இதன் பின்னர் வரையப்பட்ட "புவியியலாளர்" என்னும் ஓவியமும் அடங்கும். இரண்டு ஓவியங்களிலும் உள்ளவர் ஒருவராகவே இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது, பெரும்பாலும் ஆன்டனி வான் லீவன்கூக் (Antonie van Leeuwenhoek) ஆக இருக்கலாம்.படத்தில் இருப்பவர் வானியலாளர் என்பதைக் காட்டுவதற்காக புவிக் கோளமும், மெட்டியசு (Metius) என்பவர் எழுதிய வானியல் தொடர்பான நூலொன்றும் ஓவியத்தில் வரையப்பட்டுள்ளன. குறியீடாக, ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள புத்தகம் நூலின் மூன்றாம் பகுதி தெரியுமாறு விரித்து வைக்கப்பட்டுள்ளதாம். அம்மூன்றாம் பகுதி இறைவனிடம் இருந்து தூண்டுதல் பெறுமாறு வானியலாளர்களுக்கு அறிவுரை கூறும் பகுதி. ஓவியத்திலுள்ள சுவரில் காணப்படும் படத்தில் மோசே காட்டப்பட்டுள்ளார். மோசே அறிவுக்கும், அறிவியலுக்கும் குறியீடாகக் காட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
1668
Oil on canvas
51.0 x 45.0cm
RF1983-28
படம் மற்றும் உரை உபயம் Wikipedia, 2023

இதை நீங்கள் எங்கே கண்டறியலாம்

Louvre
Louvre
நிரந்தரச் சேகரிப்பு

அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்

தொடர்புடைய சுற்றுலாக்கள்